The Pillar of Padmavathy Construction
Mr. Arulanantham Ramasamy
திரு.அருளானந்தம் ராமசாமி
வணக்கம்!
ஒரு மனிதன் வாழ்நாளில் உயிர்வாழ முக்கியமானவை மூன்று உன்ன உணவு, உடுக்க உடை, இருக்க இடம். வீடு என்பது ஒரு மனிதனின் தனி அடையாளம். அதை வைத்துதான் அந்த குடும்பத்திற்கு ஒரு மரியாதை உருவாகின்றது. ஒருவன் தான் கட்டிய வீட்டில் அவனது பரம்பரை வாழ்ந்து பல சுப நிகழ்ச்சிகள், பிறப்பு, இறப்பு போன்ற அணைத்து நிகழ்வுகளையும் கடந்து நிற்கும் வீடு அந்த நபர் குடுபத்திற்கு ஒரு மரியாதை சின்னமாகவும் அடையாளமாகவும் திகழ்கின்றது.
பறவைகள் கூட ஒரு கூட்டில் தான் அதன் குடும்பத்துடன் வாழ்கின்றது. ஐந்தறிவு ஜீவன்கள் புலி, சிங்கம் போன்றவைகள் ஒரு குயையில் தான் தன் குடும்பத்துடன் வாழ்கிறது. பஞ்சபூதங்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கும் அப்படி நாம் இருக்கும் இடத்திற்கு வாழும் இடத்திற்கு என்று ஒரு தனி தன்மை உண்டு. ஒரு திருமணம் என்றால் கூட சொந்த வீடு உள்ளதா என்று தான் முதலில் கேட்கின்றார்கள். அந்த அளவுக்கு வீடு முக்கியமானது வீடு என்பதன் பொருள் வீடு பேறு அடைதல் என்ற பொருளுமுண்டு. அதற்கு அர்த்தம் சொர்கம் சென்றடைதல் என்பதாகும். அதுபோல் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் வீடு என்பது வாழும்போதே சொர்கம் என்ற எண்ணம் வேண்டும். இப்படி வீடு என்பது ஒவ்வொரு மனிதனின் அடையாளம் அதன் தாண்டி பாதுகாப்பு, அதை தாண்டி மரியாதை, அதைத்தாண்டி கெளரவம் அது மாடி வீடாக இருந்தாலும் சரி அல்லது சாதாரண வீடாக இருந்தாலும் சரி.
இப்படி பல சிறப்பம்சங்களை தன்னுள் வைத்துள்ளது வீடு. அப்படிப்பட்ட பெருமைக்குரிய வீட்டை கட்டும் பொறுப்பை நாங்கள் எங்களது கட்டுமான நிறுவனமான பத்மாவதி கன்ஸ்ட்ரக்சன்ஸ் மூலமாவே அவர் அவர் தேவைக்கேற்ப அவர் அவர் கையிருப்பு தொகைக்கு ஏற்ப சிறப்பாக அமைத்து கொடுத்துக்கு கொண்டுள்ளோம் என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
வீடு என்பது பஞ்சபூதத்தின் வசிப்பிடம் என்பதால் வாஸ்து முறைப்படி முறையாக அமைத்து கொடுக்கின்றோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறிப்பு:
புராண வரலாறுகள் அனைத்தும் கட்டிடக்கலையை முன் வைத்தே இன்று வரை பேசப்படுகின்றது. உதாரணமாக தஞ்சை பெரிய கோவில், மாமல்லபுரம், தாஜ்மஹால், திருமலை நாயக்கனார் மஹால், இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட கட்டிடக்கலை தொழில் அமைத்தது எங்களது முன்னோர்கள் ஆசிர்வாதம் என்றே நாங்கள் கருதுகின்றோம்.
நன்றி வணக்கம்!
Get Free Quote